வாழ்வின் தொடக்கம்
வெற்றியின் படி
தொடர்கின்ற வளியில்
முடிவிடம் எதுவுமில்லை
தொடரெனக் கண்ட உச்சம்
மலை கடல் வான் என
நின்றுவிடாது தொடரும்.
வீதியால் செல்வது
வானில் பறப்பது
நீரில் பயணிப்பது
மட்டுமல்ல பயணம்
ஒவ்வொரு இழையத்தின்
மூச்சுக் காற்றுமே பயணம்.
பல இடர் வரினும்
தடங்கலற்ற பாதை தனில்
தெரிந்தவர்கள் சிலர்
தெரியாதவர்கள் பலர் மத்தியில்
தெளிவான அறிவின் வழித்தோன்றலாய்
வாழ்வின் தடயங்களை
குறிக்கோளுடன் நகர்த்தும்.
இன்ப துன்பம் கலந்த
ஓவ்வொரு நொடிப்பயணமும்
மனிதரின் வாழ்க்கையாக
வாழ்வின் எல்லை எதுவென
புறப்படுவோம் தேட
புதுயுகம் ஒன்றைப் படைத்திட.
எமக்கென எழுதிய
தொலைதூரச் சட்டத்தின்
தூசியைத் தட்ட புறப்படுவோம்
திறக்கப்படுமா கதவுகள்
திறவுகோலைத் தொடுமா கைகள்
விடிவு வருமா எமக்கு
விடிவுகாணப் பல வளியெனில்
உண்மையின் வளி எது?
பறக்க நினைத்து
கூட்டினுள் தவிக்கும்
பறவையின் தாகம்
புரியவில்லையா உமக்கு
அதன் பயணம்
கடல் கடந்தது என.
நேரம் பார்த்து
பாரம் சுமக்கப் புறப்படுவோம்
சம்பள நாள் வருமென்று...............
ந.தர்சினி
மகிழடித்தீவு
நன்றி (படம்): www.flickr.com