நிறைமகள்

நவீன வடிவத்தில் கவிஞர் வேதமூர்த்தி எழுதும் சிலப்பதிகாரம்


தோற்றுவாய்


வித்தக நாயகன்
வேண்டுதலோடே
முத்தமிழ் ஒன்று
முளைத்துத் தழைத்து
காவியமாக கரை புரண்டது
காவலன் இளங்கோ
பாவலனானான்
பரிணமித்தது பார்புகழ்
முத்தமிழ்.

ஆகா ஓகோ! ஆகாகா!
ஆற்புதமென்னே!

ஆங்கே
உயர்‌ கோவலன்‌ கண்ணகி
கூடிய வாழ்க்கையில்‌
கோலத்தனத்தள்‌ மாதவி என்ற
மங்கை இடையில்‌
மாட்டிய வேளையில்‌
மயங்கிய கோவலன்‌
மண்ணையிழந்தான்‌-உயர்‌
பொன்னையிழந்தான்‌-நற்‌
பெண்ணையிழந்தான்‌-முழுப்‌
பண்ணையிழந்தான்‌-௨யிர்‌

தன்னையிழந்தான்‌.
இந்த
மாண்புறு ஓவியம்‌
மறுகால்‌ ஓர்தரம்‌
இன்றே
மண்ணுக்குள்‌ வித்தாகி மலர்கிறதே.

பூம்புகார்

விண்ணில்‌ கற்பகம்‌
விளைந்திட
மண்ணில்‌ மலர்ந்திட்ட
பொன்னின்‌ விளைநிலம்‌
பூம்புகார்‌ - நல்‌
பூகலத்திருத்தலம்‌ பூம்புகார்‌.

மண்ணின்‌ வளமுடை
வாழ்மக்கள்‌ நலமுடை
பலமுடை,பல்லினக்‌ கடையுடை
வணிகர்கள்‌ குடியுடை
சோழன்றன்‌ வண்காற்றக்‌ குடையுடை
திருநகர்‌.

பெண்ணின்‌ சிறப்புக்கு
என்றும்‌ பேரடுத்தது
பூம்புகார்‌.

என்ன பெருமைகள்‌ இல்லை
இதை இயம்பிட
என்மன தெல்லை தொல்லை
கண்ணின்‌ மணியவள்‌
கண்ணகி வரக்‌
காத்திருந்தது கனகால்‌

இங்கே
மன்னர்‌ நிகர்த்தவர்‌
மானாய்க்கர்‌ அவர்‌
மைத்துனர்‌ மாசாக்க வர்த்தகர்‌
வித்தகர்‌ இருவரின்‌ சொத்துக்கள்‌
விளம்பிட வார்த்தைகள்‌ சூத்தை
முத்தத்தின்‌ சாகரம்‌ மொத்தத்தில்‌
நித்தமும்‌ பிரிந்தது முற்றத்தில்‌.

ஏழைக்கும்‌ பாளைக்கும்‌
இவர்கள்‌
எடுத்துக்‌ கொடுத்தவை ஏராளம்‌.

பொன்னுக்கும்‌ பொருளுக்கும்‌ மேலாய்‌
புகழ்‌ பரம்பிடப்‌ பிறந்தனர்‌
புதல்வோர்‌.

கண்ணகி மாநாய்க்கன்‌ கன்னி
காளையோ மாசாத்தான்‌ சென்னி
மண்ணுக்குள்‌ வைரமாய்‌ வளர்ந்தாள்‌-அந்த
மறு இல்‌ மாங்கனி மாது.

கண்ணின்‌ கண்ணவள்
வண்ணமோ கண்ணினை வாங்கிடும்‌

பெண்ணுக்கு இலக்கணம்‌ ஏது
இங்கே பிறந்தது



கண்ணகி பேரால்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்