ஹைக்கூ கவிதைகள்
















# நூலறுந்த பட்டமொன்று
   தரையிறங்கியது....
   காற்றின் திசையறியாது !

===========================

# கருவேலமுள் குத்தினாலும்
   நன்றாகவேச்  சுழன்றது...
பனையோலைக் காற்றாடிகள் !

===========================

# பசுமை வயலோடு உறவாடும்
   தேய்ந்த பாதைகளில்...
   இரட்டை மாட்டு வண்டிகள் !

===========================

# மருதநில மாலை இசை
   வீடுதிரும்பும் காளைகளின்...
   கழுத்து மணியோசை !

===========================

# உயிர்மெய் எழுத்துக்களாய்
   வாழ்வியலின் மொழியில்...
   விவசாய விளைநிலங்கள் !

===========================

# மனிதநேய உரையாடல்களில்
   மகுடம் சூட்டிக்கொண்டன...
   கிராமத்துத் திண்ணைகள் !

===========================

# எனக்கு சிலப்பதிகாரமும்
   மணிமேகலையும் வேண்டாம்...
   அமுதசுரபி மட்டுமே போதும் !

===========================


கா.ந.கல்யாணசுந்தரம்