வண்டொன்று மலரில் ஆடுதம்மா!
. . வாரியுடலில் மகரந்தம் பூசுதம்மா!கண்டுள்ளம் களிப்பில் ஆடுதம்மா!
. . காலையிலந்த காட்சியே வேணுமம்மா!
தாவியே மேவியே பூவிலெங்கும்.
. . தக்கத்திமி தாளம் போடுதம்மா!
பூவில் அமுதத் தேனையுண்டு!
. . புரண்டு மஞ்சள் குளிக்குதம்மா!
சின்னன் சிறுசுதான் தேனியம்மா!
. .சிறு ஊசியாலதை உண்ணுதம்மா!
வண்ணப் பூவினில் வந்தமர்ந்து!
. . வாஞ்சையோடு வனம் ஏகுதம்மா!
அழகுப் பூக்களின் அமுதமுண்ண!
. .அத்தனையும் நித்தம் வந்திடுமே!
பழகு தமிழதன் சுவையதாய்
. . பருகிக் கவித் தேனுண்டிடவே!
-வில்லூரான்-