தாயும் தாரமும்













"தாயும் தாரமும்" தலைப்பில் எழுதிய கவிதைக்கான சிறப்பு விருதை பெற்றுள்ள கவிதை


உதிரத்தை ஊணாக்கி உடலென்ற நம்
. . .
கூட்டில் உயிரானவள் தாயடா!
இதயத்தை உனதாக்கி உயிரோடு தினம்
. . .
கூடவே வந்தவள் தாரமடா!

தாரமும் தாயும் தனிச் சக்தியடா!
. . .
தமக்காதல் தானியற்று வரங்களடா!
ஆதாரமானவள் ஆயுளுக்கும் தாயடா!
. . .
அடுத்து வரமானவளே தாரமடா!

தாய் மடியும் எம்; சொர்க்கமடா!
. . .
தரும் அன்பில் உயிர் காக்குமடா!
தாரமவள் மடியும் சொர்க்கம் தானடா!
. . .
தன்னுயிர் தரும் தாய் வர்க்கமடா!

பெண்ணவர் இங்கு தெய்வப் பேறடா!
. . .
பேதமில்லை இருவரும் பேசும் தெய்வமடா!
கண்ணவரே கடைசிவரை நமக்கடா!
. . .
கண்ணிமையாய் காப்பதெம் கடமையடா!

பெண்ணடிமை கொள்வார் விலங்கடா!
. . .
பெருங்கவி பாரதி வழியில் நில்லடா!
தன்னினம் காத்திடும் இருவரும் தாயடா!
. . .
தரணியிலவர் தந்த மொழியே உயிரடா!



கவிஞர் கவியருவி வில்லூரான்