முத்தமிழ் வித்தகனே

27-3-2016 சுவாமி விபுலாநந்தரின் "பிந்த  தின சிறப்புக் கவிதை 

-----வில்லூரான்----
முத்தமிழின் முதிர் வித்தகனே
...... முதல்த் தமிழ்ப் பேராசானே
எத்தனை ஆண்டுகள் கடந்துமென்ன
......இருப்பாய் தமிழ் இருப்புடனே
தமிழ்த் தாயவள் கண்ணம்மை
......தயவில் உதித்த தகையேயுனை
தமிழ் வாழும் வரையில் இனி;
......தழுவியே இருப்பாய் தமிழுடனே
யாவரும் போற்றும் யாழ்நூல்
......யாமறிய யாத்தாய் தமிழில்
நாவிலும்கா நயமுடன் நாடகத்தில்
......நயமுடன் சேர்த்தே நயந்திட்டாய்
குஞ்சித் தம்பி குருவானார்
......குவலயம் போற்ற நீங்கள்
அஞ்சினர்க்கு சத மரணமென்று
.....அகலை நெஞ்சில் ஏற்றியவனே
சாண் எனும் வயதிலும்கூடவே
....சந்தமுடன் சங்கத்தமிழ் கவி
ஆசானும் அதிரத் தீட்டியே
.....அவை போற்ற அமைத்திட்டாயே!
கங்கை விடுத்த கவியோலையிலே
.....கால வாழ்வை குச்சியுலுரைத்தாய்
எங்கள் தமிழை வாழவைத்துலகை
....இறையடி எய்தியும் வாழ்ந்தீர்