மட்-புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம் நிகழ்த்திய கவிஞர். நிலா தமிழின் தாசனின் "வாழ்வு விடியும்" கவிதைத் தெகுப்பு நூலும், "ஆதித்தனும் அடர்ந்த காட்டுச் சாமியாரும்" எனும் சிறுவர் குறுநாவலும் இன்று (13.09.2015) மாலை 3.00 மணியளவில் கதிரவன் .த. இன்பராசா அவர்களின் தலைமையில் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ. கிழக்கு மாகாண சபை அமைச்சர். திரு. கி.துரைராஜசிங்கம் (கவிஞர். அண்ணா தாசன்) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதன் போது இவ் வெளியீடுகளின் முதற் பிரதிகள் முறையே திரு.க.பாக்கியராசா மற்றும் சைவப் புரவலர். வி.ரஞ்சிதமூர்த்தி ஆகியோருக்கு வழங்கப் பெற்றன.
மேலும் கௌரவ .கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான .திரு.கோ.கருணாகரம் மற்றும் திரு.மா.நடராசா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் , மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க காப்பாளர்.கலாபூசணம்.செ.எதிர்மன்னசிங்கம், தொல்லியல் ஆய்வாளர்.க.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் .த. மலர்ச்செல்வன் மற்றும் மூத்த கவிஞர். தம்பிலுவில் ஜெகா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் இரு நூல்களின் ஆய்வுரைகளை முறையே திரு.அன்பழகன் குரூஸ் மற்றும் கவிஞர் சிந்ரா ஆகியோர் நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் நூலாசிரியரான கவிஞர்.நிலா தமிழின் தாஸன் அவர்களுக்கு கதிரவன் கலைக் கழகத்தினரால் “வீரகவி” பட்டமும் கவிஞர்.தம்பிலுவில் S.P.நாதன் அவர்களால் வாத்துப்பாவும் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றது.

