நான் பிழைத்தால்

நான் செய்த தவறின் போது

நீ ஏசும் வார்த்தைகளின் போது
தான் நான் அவ்வளவு பெரிதாக
உடைந்து அழுகிறேன்.

ஏன் இன்னும் அழகாய்
எனக்கு புரியும்
விதமாக நீ எடுத்து
சொல்லிருக்கலாம் ..

நான் எனதான பிழையை
உனகெனவே திருத்திருப்பேன்
எல்லா நேரமும் எல்லா தவறுதலும்
பிடிப்படுவதில்லை

அது சில கனம் எமக்கு புரியாமலே 
மறைப்பொருளாகவே இருந்திடும்
ஒன்றுக்கு பத்து தரம் சரிப்பார்த்தாலும்
உணராமலே போயிருக்கும்

உனக்கு பிடிக்கவில்லை
எந்தன் செயல்
நீ செய்ததில் 
எனக்கு உடன்பாடு இல்லை என்றாவது 
சொல்லிருக்க கூடாதா ?
நீ செய்ததில் எனக்கு வருத்தமென்றாவது 
உணர்த்திருக்கலாமே ..

ஏன் தான் வார்த்தைகளை
கொட்டி கடுகடுக்கிறாய்
உனதான பாசத்தை காட்டிலும்
பெரிதென எதை நினைப்பேன்


அப்போதே எனதான பிழையை
திருத்தி மாற்றிருப்பேனே ..

M. S sahnas begam

கருத்துரையிடுக

0 கருத்துகள்