நாட்டார்பாடல்

பெண்:
கட்டு வேட்டிக் கட்டு
    காள வண்டி ஓட்டிக் கிட்டு
காட்டு வழிப் போற மச்சானே
    காட்டு மானுன்; கண்ணு வைச்சாலே


ஆண்

கஞ்சிக் கலயம் தூக்கிக் கிட்டு
    இஞ்சி இடைய ஆட்டிக் கிட்டு
காட்டு வழிப் போற மானே
    காதல் கொண்டேன் உன்னை நானே

பெண்

காள வண்டி ஏறிக் கிட்டு
    கன்னிப் பொண்ணு நானும் வந்தா
ஊரு என்ன சொல்லும் மச்சானே
    உணர்ந்து வண்டி ஓட்டு மச்சானே

ஆண்

கூட்டு வண்டி கட்டிக் கிட்டு
    கூட்டிப் போகும் நாளும் வரும்
மாட்டுவண்டி முன்னாளதான் போடி புள்ள
    காட்டுவழி காவலுக்கு வாறேன் நானும்

பெண்

முன்னால் என்ன நடக்க விட்டுப்
    பின்னழகப் பர்த்துப் பாத்து நீயும்
பிழையா வண்டி ஓட்டிடவே மச்சானே
    பின்னால் வாறேன் ஓட்டு மச்சானே

ஆண்

இஞ்சி இடை ஆடும் போது
    நெஞ்சம் கண்டு மகிழும் மானே
கஞ்சி கண்டாக் காள மாடு
    கதியக் கொஞ்சம கூட்டி ஓடும்தானே

பெண்

இஞ்சி யிடை ஆடக் கண்டு
    இடை மறிச்சிக் கொஞ்சு வாயே
அஞ்சி நானும் போறன் மச்சான்
    ஆரும் கண்டா ஊருக்கு அம்பலம் தானே


வில்லூர் பாரதி