மறுவாழ்வு இருக்கிறதே .... என்றெண்ணியவாறு !


கிழிந்தக் கோணிப்பைக்குள்
இருப்பதெல்லாம்
அவனுக்குச் சொந்தமானவை
வீடு, மனைவி மக்கள் என்ற
உலகத்தை விட்டு தனித்து இயங்குபவன்....
அடுத்த வேளை உணவு என்பதுகூட
இல்லாமலும் இருக்கலாம் ....
ஒளியிழந்த கண்கள் இருப்பினும்
வெளிச்ச நிகழ்வுகளுக்குள்
அவனது பார்வைகள்
ஒரு அங்கீகாரம் கொள்கின்றன !

இரவுப் போர்வைக்குள் உலகம்
உறங்கும் முன்னே...இவனது
கோணிப்பைக்குள் தினுசு தினுசாய்
சிதைந்துபோனப் பொருட்கள் .....
குப்பைமேட்டிலும் கால்வாய்களிலும்
கிளறிய கைகளின் அழுக்குகளினூடே
மறந்திருக்கும் குபேர ரேகையை அவன்
அடையாளம் காண முற்படுகையில் ....
தூக்கி எறியப்பட்ட ஒரு உடைந்த
' பிளாஸ்டிக் ' வாளியை எடுப்பதற்கு
முந்திக்கொண்டு ஓடுகிறான் ....!
பயனற்றப் பொருட்களுக்கும்
மறுவாழ்வு இருக்கிறதே ....
என்றெண்ணியவாறு !


கா.ந.கல்யாணசுந்தரம்