வாழ்த்துக்கூட அறமே

உலகப் பொருள்கள் யாவிலுமே
உரிமை உனக்கு இல்லையடா
உலகை விட்டுப் போகையிலே
உணர்வாய் அதுதான் எல்லையடா
கலகம் செய்து பறிக்கின்றாய்
களவாய் எடுத்து மறைக்கின்றாய்
உலகை ஏய்த்துப் பிழைக்கின்றாய்
உயிரை மாய்த்து நிலைக்கின்றாய்
எடுத்தவை உனக்குச் சொந்தமென்றா
எய்ப்பில் நீயும் வைக்கின்றாய்
அடுத்தவன் கொள்வான் அறிவாயா
அதற்கே மரணம் புரிவாயா
கொடுத்து வாழ்வதிற் சுகமுண்டு
கொடுத்தவை கிடைக்கும் எடுஅன்று
மடுத்து மனிதரை வாழாதே
மரணத்தில் துன்பம் தேடாதே
அடுத்தவன் பொருளில் ஆசைகொண்டு
அலைவது மடமை அறிவாயிங்கு
அடுத்தவன் துன்பம் நீகண்டு
ஆறுதல் சொல்வதும் அறமிங்கு
பொன்னும் பொருளும் கொடுத்தின்று
புகைப்படம் எடுப்பது அறமல்ல
எண்ணம் நல்லது நீகொண்டு
இயம்பும் வாழ்த்தும் அறமிங்கு

வில்லூர் பாரதி