அந்த ஐப்பசிக்காரி...

தங்க நிறமுடையாள்
திங்கள் முகமுடையாள்
அங்கம் ஒவ்வொன்றும்
அடடா என்னழகுடையாள்
தங்கைகளே கிடையாள் - இவள்
தனிக்கோட்டை ராணியளாள்

உள்ளம் பாலாகும் - அவள்
உறைவிடம் தேராகும்
கள்ளம் சேரா அவள்
அத்தனையும் மேலாகும்

செல்லக் குறும்புக்காரி
சிரிப்புக்கு ரசிகனானேன் - அந்த
வெல்லக் குரலுக்கு
வெகுவாய் அடிமையானேன்

வைபரில் வருவாள்
வடிவாய் எனைப் பார்ப்பாள்
சைவராகும் சோகம்
சந்தோச
செல்கள் உரு வாகும்

மாதுளம் பூ உதட்டு எழில்
புன்னகைக் கவி பாடும்
அந்த
வண்ண ஜதி ருசிக்க
இவன் நெஞ்சம்
குத்தாட்டம் போடும்


தொடரும்.....

ஜெமஸ்கரன்