இதை நீக்கு இது வரும் ...................















ஆசை அணை மீறி விட்டால்
அவலங்கள் வந்து கூடும்
அன்பு மனதில் ஊறி விட்டால்
அகிலமே வந்து கூடும்
காசேதான் வாழ்க்கை என்றால்
கவலை கோடி வந்து குவியும்
கடமைதான் வாழ்வில் நின்றால்
கடவுள் அருளும் வந்து நாடும்
ஏழ்மை என்றே இருந்து விட்டால்
ஏளனமே ஏராளமாக ஆகும்
எளிமை வாழ்வில் இருந்து விட்டால்
எளிதாய் எல்லாம் ஆகும்
கோபம் நீ கொண்டு விட்டால்
கொடும் செயல் நடக்கும்
பாவம் என விட்டு விட்டால்
பரணி ஆளக் கிடைக்கும்
சோம்பி நீ இருந்துவிட்டால்
சுற்றமே உனை இகழும்
நம்பிக்கை கொண்டெழுந்தால்
சுற்றும் பூமி கால் திகழும்
பொய்மை புகுந்து விட்டால்
புதுமை எங்கும் நிகழாது
வாய்மையின் வழியே நின்றால்
வரும் யாவும் புகழாகும்
வஞ்சகம் நெஞ்சில் வளர்த்தால்
வரும் யாவும் வருத்தமாகும்
நெஞ்சமதில் நேர்மை நின்றால்
நினைத்தவை யாவும் நிறைவாகும்


- வில்லூரான்-