மகிழடித்தீவு படுகொலை 25 ஆவது ஆண்டு நினைவு நாள் 2016.06.12

















1991. 06.12 அன்று
மகிழடித்தீவு கிராமம்
இரண்டாவது படுகொலையை
எதிர்  கொண்டது.

எரிகிறது வீரம் நிறைந்த மண்
உருகிறது உயிர்கள்
கருகிறது உறவுகள்
ஓடுகிறார்கள் எம் மக்கள்
கதறுகிறார்கள் வாலிபர்கள்
பாதகர்கள் கையில் யுவதிகள்
சிக்குண்டு தவிக்கிறார்கள்.

தஞ்சமடைந்தனர்
ஞானமுத்து குமாரநாயகத்தின்
அரிசி ஆலையிலே
 துப்பாக்கிக்கு இரையாகி
வெந்த அனலில்
கருகிப் போகியது
எம் உறவுகள்.

தாயவள் முலைப்பால்
ஊட்டிய நிலையிலே
தான் பெற்றெடுத்த
கைக்குழந்தையுடன்
கறைபடிந்திருந்தாள்
இறந்த உயிர்கள்
ஓவியங்களாகவே இருந்தன.


அன்றைய நாள்
இருட்டானது எம்மூர் மக்களுக்கு
நூற்றுக்கு மேற்பட்ட
உறவுகளை இழந்து நின்றோம்
கைக்குழந்தையும்
வயோதிபத்தையும்
பார்த்த வெறியர்கள்
அவர்களின் கால்களில்
நசிக்கினர் இவர்களை.


வேலிக்கம்பியினூடே
நகர்ந்த மக்கள்
உயிர்களை
அதன் முட்களில்
விட்டுப் புகுந்தனர்.


அன்றைய மாலை வேளையிலே
மீனாட்சியடி மடுவில்
எம் எதிரிகளால்  
உயிருடன்  எரிக்கப்பட்ட
எம் உறவுகளின்
இரத்தங்கள்
கறைபடிந்து நிற்கின்றது.

 நடராசா. தர்சினி
மகிழடித்தீவு.


நன்றி - விகடன் (ஓவியம்)