சித்திரமே! சிறுநகை சிந்துகையில்.....
















சித்திரமே நீ அசைந்து வருகையில
சிறுமையெலாம் சிதைந்தோடி மறையுதடி
பூத்திட்ட புதுப்பூவாம் உன் பாதம் பதிச்சி
புன்னகைச்சி நீ வருகையில புதுவுலகு தோணுதடி

முத்துப்பற் சிரிப்பாலென் முதிர் மனதில்
முகிழ்த்த துண்ப மூட்டை அவிழுதடி
சுத்தும் பம்பர விழியசைவும் சுட்டு விரலும்
சுகம் தந்தின்ப வானில் எனை ஏத்துதடி

தத்தித் தவழ்ந்து தடம் மாறி வருகையில
உத்தித்தள்ளி மனமுனையணைக்கச் சொல்லுதடி
கத்தி வச்ச கரு விழிப் பார்வையில
சுத்தமா ஒருசொட்டுக் கலங்கமுமில்லையடி

தேனிசையாம் உன் மொழி கேட்கையில இன்பத்
தேன் வந்து பாயுதடி என்னிரண்டு காதினிலே
மானொத்த விழியிரண்டும் எனை நோக்கையில
மார்பணைச்சி முத்தமிடவே மனம் துடிக்குதடி

சேர்த்ணைச்சி சிறு உச்சி முகர்கையிலே
கோர்த்துவிட்ட குண்டுமல்லிப்பூ மணக்குதடி
சேர்த்து வச்ச செல்வமெல்லாம் தேவையில்லயடி
செவ்வாய் திறந்து சிறுநகை சிந்துகையில்

(எனது கடைமகள் கண்டுதித்தது)
வில்லூரான்