வந்தவாசி.நவ.21. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் இணைந்து நடத்திய 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழா சார்பாக பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றர். மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எ.மு.உசேன், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்யூட்டர் நிறுவன முதல்வர் எ.தேவா, ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வந்தவாசியைச் சுற்றியுள்ள 6 முதல் 12-ஆம் வகுப்புவரையுள்ள பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நடத்தப்பட்ட
ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கிளை நூலகர் கு.இரா.பழனி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில், ரூ.1000/- செலுத்தி, 170-ஆவது நூலகப் புரவலராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ப.ஜெயலெட்சுமி இணைந்தார்.
மூன்றாம் நிலை நூலகர் சா.ஜோதி,யுரேகா ஒன்றிய கருத்தாளர்கள் மு.குமரன், மு.ஜீவா, முருகன்,
பள்ளி ஆசிரியர்களும் ஏராளமாய் கலந்து கொண்டனர்.
நிறைவாக, நூலக உதவியாளர் மு.ராஜேந்திரன் நன்றி கூறினார்.