கூற்றுவனைநேரினிலேசென்றழைத்துக்
கூடங்குளம்அணுஉலையாய்அமரவைத்தோம்
நேற்றுவரைசுதந்திரமாய்வலையவந்த
நெய்தல்நிலம்மரணகுழிஆனதின்று
ஊற்றுவரும்நிலத்தடிநீர்நஞ்சாய்மாறி
ஊர்முழுதும்சுடுகாடாய்ஆகும்நாளை
காற்றினிலும்கதிர்வீச்சுபரவிமூச்சில்
கலந்துஉயிர்மூச்சுதனைநிறுத்தும்உண்மை
!
சாதிவெறிதலைதூக்கிஅழித்தல்பார்த்தோம்
சார்ந்தமதவெறியோங்கிஅழித்தல்பார்த்தோம்
வீதிகளில்தலைவர்கள்புகழைப்பாடி
விளைந்தகட்சிவெறிபொங்கிஅழித்தல்பார்த்தோம்
ஆதியிலும்பாதியிலும்இல்லாதின்றோ
அறிவினாலேவந்தஉலைவெறியினாலே
மீதியிங்கேஎதுவுமின்றிஅழிக்கும்போது
மீட்சிதரப்பார்ப்பதற்கும்இருந்திடோமே
!
கண்முன்னேதெரிகின்றகதிரும்;
வீசிக்
கண்ணுக்குத்தெரியாதகாற்றும்;ஆழ
மண்ணுக்குள்புதைந்திருக்கும்கரியும்;
வானின்
மழைத்துளியும்மலையருவிகடலலையும்
வெண்ணெய்போல்கையிருக்கமின்சாரத்தை
வேண்டுமட்டும்நாமெடுக்கமுயன்றிடாமல்
எண்ணெயினைநம்தலையில்நாமேஊற்றி
எரிவைத்தல்போல்அணுஉலையைவைத்தோம் !
பாவலர் கருமலைத்தமிழாழன்