''போர்க்காலமும் ஊர்க்கோலமும்''கவிதை நூல் வெளியீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில்.. கடந்த 18.10.2015 அன்று புதுக்குடியிருப்பு ஜெயம் ஜெகனால் ''போர்க்காலமும் ஊர்க்கோலமும்'' எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. பிரதம விருந்தினராக.. இந்தியத் துணைத்தூதர் கொளரவ நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். கலாபூசனம் நடராஜா இராமநாதன் தலைமைதாங்கிய இந் நிகழ்விற்கு, யாழ்/பல்கலை பேராசிரியர் சிவசந்திரன், பண்டிதர் பிரதீபன், அதிபர் நாகேந்திரராசா, மற்றும் கவிஞர்கள் கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர். நூலாய்வினை முல்லைரமணன் நிகழ்த்தினார்.வாழ்த்துரை கவிஞர்.முல்லைத்தீபன் அவர்களாலும் நிகழ்த்தப்பெற்றன. இக்கவி நூலில் போர்க்காலக் காட்சிகள் பலதும் பதிவேற்றப்பட்டிருந்தாலும் போருக்குப்பிந்திய கால சில பதிவுகளையும் சுய சிந்தனை வெளிப்பாடாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஜெகன். உண்மையில் சமகால முல்லைத்தீவின் நூல் வெளியீடுகளில் அதுவும் புதுக்குடியிருப்பில் அதிக சனத்திரளைக் கொண்டதாக இது அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்.