தார்மீகக் கோபம்
















அது மனுதர்மர்களின் காலம்
வாய் வாக்குகள் சாகவில்லை
துலாக்கோலின் சிறு அதிர்வுகள்
கோரம் விழைவித்தன
மனு நிதிக்காய் மகவையும்
துறந்தான் மறத்தமிழ் மன்னன்


சத்தியச் சரித்திரங்களில்
ஊறித்திழைத்த எமக்கே
இன்று சாவுமணியா…?

செத்துப் போன தேர்தல் வாக்குகுள்
உயிர்த்தெழ ஒன்றும் பீனிக்ஸ் அல்ல
யாதுமற்ற ஏட்டுச் சுரக்காய்கள்
பொய் என்று தெரிந்தும்
புடம் போடுவோருக்கும் புரிய வைப்போம்

விழி நனைக்கும் சுடு நீர்த்துளிகள்
வழிந்து விழுந்து வம்சம் அறுப்பதும்
ஏக்க மூச்சுகள் காற்றில் கலந்து
இறந்து போன ஏந்தல்களை எழுப்புவதும்
சத்தியம் என்று சபதமிடுவோம்
காறி உமிழ்ந்து கயவர்களை
காட்டிக் கொடுப்போம் உலகத்திடம்
நீதி கேட்போம் தெய்வத்திடம்.

 நா.கலைமதி
திருக்கோவில்-01