தங்கவிடாமலேன் என்னைத் நீ துரத்துகிறாய் உனைத்
தங்கமென நான் தினமும் சொல்லி வருவதாலோ
பொஙகுசனி மங்குசனி என்றுமற்றோருனைச் சொன்னாலும் நானென்
அங்கத்தில் ஒருவனாய்த்தான் பூஜித்து வருகின்றேன் உன்
மங்காத புகழ்தனை பாடுவது போதாதா இல்லை
இங்கிதங்கள் தரும் பண்டம் படைப்பது போதாதா
எங்கு சென்றாலுமுன்னை விடமாட்டேன் என்று என்னில்
தங்கிநிற்கும் பகவானேஎன்ன காரணமென் றெனக்குச் சொல்லேன்
உன் எழில் வதனமும் உன் மகிமைப் புன் சிரிப்பும்
என் முன்னே வந்து எழுது ஒரு பாவென்று
உன் கண்ணாலே பேசுவது நானறிவேன் ஈஸ்வரனே
தன்னையும் வணங்குவோர்க்கு தாவென்று கேட்டாலே
உன்னைப்போல் கொடுக்கும் தெய்வமுமுளதோ காண்
சின்னவன் நான் சிறிய பிழைசெய்தாலும் என் மனதிலுள
மன்னவனே மன்னித்துன் புகழ் பாட அருள்தாராய்
இன்னமும் தாமதமேன ;ஏறி வா காகத்தில்
தம்பிலுவில் தயா