சோடிக்கிளியாக….…

சொல்லாமல் வந்த காதலால்
வாழ்வில் சுகந்தங்கள் வீச
வாழ்க்கை படிநிலையே மாறிப்போனது.
இறகு  வெட்டப்பட்ட கிளிபோல
மெதுவாக காதல் வானில் பறக்க
காதல் சிறகு முளைத்தது உன்னாலே.
உன்னைப்பற்றிய ஒவ்வொரு சுதாரிப்பில்
வெட்டிய சிறகு துளிர் விட்டு வளர்கிறது.
ஓலை குடிசையில் ஊர் அற்ற மனிதனாய்
ஊட்டிவளர்க்க யாருமில்லாமல்
விசரன் போல் சுற்றித்திரிந்தேன்
உன் மனதில் அடைக்கலம் தந்தாய்
நீ வரும் பதையெல்லாம்
உன் கால் தடங்களை தேடுவதும்
என் நினைவுகளில் எல்லாம் நீதான்
ஒளிமயமாக தெரிகிறாய்.
காலமெல்லாம் காத்திருக்கேன்
உன் பட்டத்து படிப்புக்காய்
சில காலம் போகட்டும்
கானகத்து கிளியை பார்ப்பதற்காய்
என் கண்ணுரொண்டும் துடியாய் துடிக்கிறது.
காலமெல்லாம் பொக்கிஷமாய் சேர
ஒரு கூட்டு கிளியாக
சோடியாக பறந்திடுவோம்…..

-ரூபன்-