வழிபடு அவளை நீ என்றும்

ஊனற்ற பிள்ளை கூட
உன் போலும் தாயவளை
உதறித்தானிங்கு தவிக்க
விட்டுத் தானிங்கு வாழயில
ஊணுற்ற உனைச் சுமக்கும்
உண்மைத் தாயவளை
காணுற்ற போதிலவர்தான்
கண் கலங்க மாட்டாரோ
கருவுற்ற வரையிலுண்ணை
கண்ணுற்ற அவs;தன்னை
எண்ணித்தானவர்
இனியேனும் கலங்காரோ
எண்ணற்ற irகளை
எண்ணித்தானவள் உனையீன்றால்
பெண்ணென்றே  னாலும்
பேறென்றுனை வளர்த்தே
இன்புற்று வாழுமவளை
தான்பெற்ற பேறம்மா
இடுப்பு வலி பொறுத்துன்னை
ஈன்றவள்தானுன்னை
இடுப்பpனிலே ஏந்திடல்தானிங்கு
கடுப்பாகிடுமோ மகளே
துடுப்பே அவள் ஆனால்
உன் வாழ்க்கைப்படகுக்கு
சுமப்பது சுகமென்று
அவளுக்கு மட்டுk;;தான்
தெரியும் யாரறிவார்
அதனால்த்தான் உன்னை
அவளுயிருள்ளவரை சுமந்திட
வலிமையை கொடுத்தான்
வலி படாதே நீ என்றும்
வழிபடு அவளை நீ என்றும்

திரு.க.முரளிதரன்(வில்லூரானர்)