பச்சச் சேல கட்டி
பசுங்கிளியே நீயிருக்க
இச்சைப்பட்ட மச்சான்
இங்கிருந்துதான் தவிக்க
நுச்சென்னு கன்னத்தில
நானொன்னு வச்சிடத்தான்
பச்சமல பஸ் ஏறி
பகல் படுறதுக்குள்ள
பறந்தோடி வந்திடுவேன்

கூடை நிறையக்
குண்டு மல்லி நீ பறிச்சி
கூந்தலில சூடிக்கொள்
வாசமிழக்கா என்
பாசவல்லி உனையணைச்சி
பாச முத்தம் தந்திடுவேன்

கந்தன் கோயிலில ஒரு
காந்தப் பார்வையில
எந்தனுயிர பறிச்சவளே
சொந்தமென்னு யாரிருக்கா
சோகம் சொல்ல உனவிட்டா

செந்தூரமள்ளி வச்சி
செவ்விதழில் முத்தம் வச்சி
சந்தனத்து வாசமள்ளி
சாயங்காலமெல்லாம்
சாய்ந்திருப்பேன் உன்மடியில்

கண்ணுக்குள்ள கரு மொழியா
வாழும் என் தமிழ் மொழியா
ஒண்ணுக்குள் ஒண்ணா
ஒளிஞ்சிருப்பேன் உசிருக்குள்ள
மண்ணுக்குள்ள போகுமட்டும்
என்னிதய வானில்
இஸ்டப்பட்ட நிலவா நீ இருப்பே 


திரு.க.முரளிதரன்(வில்லூரானர்)