மகுடம் பதிப்பகத்தின் 12 ஆவது வெளியீடாக வந்துள்ள கல்முனை நோ.இராசம்மாவின் புதிதாய் பிறந்தோம் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 04.09.2016 பி.ப 4 மணிக்கு கல்முனை கிறிஸ்த இல்லத்தில் இடம்பெறும்.
கல்முனை நோ.இராசம்மாவின் முதல் தொகுப்பான ஒரு துளி கவிதை நூல் 1977 இல் வெளிவந்திருந்தது. ஈழத்தில் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்கள் பலதிலும் தனது படைப்புகள் வெளிவந்தபோதும் காலம் கடந்து இந்நூல் வெளிவருவது கவலைக்குரியதே.
இலக்கிய ஆர்வலர்கள், விமர்சகர்கள், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் அனைவரையும் இளைய நதி கலை இலக்கிய செயற்பாட்டு குழுமம் சார்பில் எதிர்பார்கின்றோம்
- டணிஸ்கரன் -
0 கருத்துகள்