(ரவிப்ரியா)
ஆழமாய் கவித்துறைக்கு ஆவன செய்வதில், புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம் இலக்கிய சமூகத்தின் ஈர்ப்புக்குரியது. கவித் துறைக்கு ஆணிவேர் போல், அசையாது நின்று நிழல் தரும் நெடு மரம். அத்தகைய கழகம்
அசுப்பின்றி
ஏற்பாட்டில்
விடியுமா தமிழர் வாழ்வு? என்ற தமிழரின் ஏக்கத்தையே தலைப்பாக எடுத்து, இழுபறியாக இருக்கும் வடக்கு கிழக்கு இணைப்பை, கவிஞர்களால் இணைத்து ஏற்படுத்திய வரலாற்றுப் பெருமைக்குரிய கைங்கரியத்தை முதலில் பாராட்டியே ஆக வேண்டும்.
“அன்புமணி”
என்ற பழம் பெரும் இலக்கியவாதி அவதரித்த ஆரையம்பதியில் இக் கவியரங்கு இடம் பெறுவது இலக்கிய நெஞ்சங்களில் பால் வார்த்தது போன்றது. இது ஓர் இலக்கிய பொங்கல் என்பது இனம் காட்டப்பட்டதால் இணைந்து கொண்டோர் இதயமெல்லாம் பூரிப்பு. இத்தகைய மனத் திருப்தியோடு அரங்கில் நுழைகின்றோம். மண்டபம் நிறையாவிட்டாலும் கூட இலக்கிய முதிசம்களின் முகம் பார்த்து, துறைசார் வல்லுனர்களின் வரவு பார்த்து, கலப்படமற்ற இலக்கிய சங்கமம் என்ற கணிப்போடு, களிப்போடு இருக்கையில் அமர்கின்றோம்;
கழக
தலைவர் த.இன்பராசா ஆரம்ப
உரை நிகழ்த்த ஒலிவாங்கியுடன் ஒன்றிப் போகின்றார். மாறிவரும் கலாசார சீரழிவுகள் பற்றி சீறுகின்றார். குனிந்து எழுந்தால் கிழிந்துவிடும் பெண்கள் நாகரீக ஆடைபற்றி குறிப்பிட்டு குமுறுகின்றார். கலை, கலாசாரம் பண்பாடு பற்றிய பற்றுறுதி கொண்டவரால் பதறாமல் தான் இருக்க முடியுமா? இப்படி போனால் எப்படி ஐயா எமக்கு விடிவு? என்ற அவரின் ஏக்கத்துடன், தலைமையுரை ஏற்கின்றார் கவிஞர் அண்ணாதாசன் (கி.துரைராஜசிங்கம்)
தெள்ளு
தமிழால் தெளிவான கருத்துக்களை கன்னித் தமிழில் தெளித்து, அவர் அரங்கை உசுப்பேற்றிவிட்டார்.அரங்கோ உணர்வுகளால் உந்தப்பட உரத்த சத்தத்தில் கைதட்டல்கள்.
ஓரிரு
வரிகளாக சுருக்கி; சுருக்கித்தான் சொன்னாலும், கிட்ட நின்று சுடுவதுபோல் வார்த்தைகள் சன்னங்களாகி தாக்கின. சுயாட்சி கேட்கையிலே சுண்டக்காய், ஆணைக் குழு ஆனைக் குழுவாக மாறியதால், மறத் தமிழனும், மரத் தமிழனும், பொறுமை காத்தோம் வெறுமை போர்த்தோம், வேராடா விதத்திலே போராட வேண்டும் போன்ற அருமையான சொல்லாடல்கள் மூலம் கசப்பான விடயங்களையும் அம்பலமாக்கி கவிஞர்களுக்கு அழகாக அடைமொழிகள் கொடுத்து அழைக்கத் தொடங்கினார். அரங்க கவியரசுகளை.
மன்னார்
அமுதன் அரங்கில் நின்று அமைதியாய் கவிதை அமுது காத்திரமாகப் படைத்தார்.
அவரின்
கவிதை; துளிகளிலிருந்தது சிந்திய முத்துக்களாய் முத்தமிழாய் கோர்த்த மாலையில் பதித்த பதக்கங்;களாக எம்மில் பதிந்தவை இவை. உலகப் படை கொண்டு அழித்தீர்!- தமிழனை கலகப் படையென்று அழைத்தீர்..சமர்ப்பணங்கள் எமக்களித்த பண்டிதர் பலர் சன்மானம் கிடைத்தவுடன் ஓடி விடடனர். பூக்கொடுத்து கை குலுக்க எமக்கும்
சம்மதம். புறமுதுகில் குத்திவிட்டால் யார்க்குப் பாதகம்?
கவிஞர்
முல்லை தீபன் கவி தொடுக்கத் தொடங்கியதும், அரங்க அதிர்ந்தது. நீரூற்றை, நெருப்பை, மின்னலை, இடியை, தென்றலை, புயலை அவர் குரலில் இனம்காட்டி, ஏற்ற இறக்கங்களை இங்கிதமாகச்; செய்து தனது ஆற்றலால் பொருதினார். காரியத்தில் கண்ணாயிருந்து, காப்பாற்று விக்னேஸ்வரா! (பலத்த கைதட்டல்கள்), ஓசியில் வந்த ஏசியில், கற்புநெறி காத்ததால் கடவுளானால் கண்ணகி, மாலையிட்ட மக்களுக்கெல்லாம், கிடைத்ததெல்லாம் மலர் வளையங்கள். முள்ளிவாய்க்கால் அவலங்கள், லீசிங் பொருளாதார சுரண்டல், போன்றவற்றையும் போட்டுடைக்க அவர் தவறவில்லை.
அம்பிளாந்துறையூர்
அரியம் அரங்கை ஆக்கிரமித்து, அனுபவங்களை அழகாக எச்சரிக்கையுடன் எடுத்தியம்பினார். தை பிறக்கும் போதெல்லாம்
தமிழர்க்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை கடந்த மூன்ற சகாப்தங்களாக இருந்து வருகின்றது. சில நாட்களில் அது சிதைந்து விடுவதுதான் வழக்கம். நல்லாட்சி நரியாட்சியாக மாறாமல் இருக்க, கவனமும் எமக்கு வேண்டும். சதிகள் பல தாண்டி மாற்றம்
வரும்.; மறுபடியும் எழுவோம். விடியும் தமிழர் வாழ்வு என்று விவேகத்துடன் செயற்படுவோம். என்ற நம்பிக்கையை முன் வைத்து விடைபெற்றார்.
ஒரே
பெண் கவிஞராகப் பங்கேற்ற தம்பிலுவில் ஜெகா அடக்கமாக இயல்பான பெண் சுபாவத்துடன் நின்று அரங்கை கவிதையால் அலங்கரித்தார். பாலகன் என்றும் பார்க்காமல் உடற் பசி தீர்க்கும்; கயவர்கள் பற்றி கவிதையால் துப்பினார். 50 வருடங்களின் பின் அம்பாறையில் தமிழர் இருப்பு பற்றிய அச்ச உணர்வை வெளிப்படுத்தினார். நாம் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் கூட மொழிப் பற்று இன்றி அர்த்தமுமின்றி பெயர் வைப்பதை வெகுவாகச் சாடினார்.
சேனையூர்
இரா இரத்தினசிங்கம் கவியரங்கை மேலும் களைகடடச் செய்தார். நாமில்லா நாடில்லை. நமக்கென்று நாடில்லை என்று தனது ஆதங்கத்தை பா வடிவில் பகிர்ந்து
கொண்டார். கதிரை பிடிப்பதற்கும் காத்திருந்து கழுத்தறுப்பதற்கும் காரியமாற்றுவோர் பற்றி காரசாரமாக கவியுரைத்தார்;. விடிவு வரத்தான் போகின்றது என்று விளக்கமும் சொன்னார்.
பொலிகையூர்
சிந்துதாசன் பொலிவாக புனைந்த கவிதை அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களால் எதுவுமே நடக்கவில்லை. காலந்தான் கடந்தது காரியம் ஆகவில்லை என்ற கவலையை வெளிப்படுத்தி நின்றது. கைத் தொலைபேசிகளும், பேஸ் புக்ககளும் இளைய தலைமுறையினரை தலைகீழாக நடக்க வைக்கின்றது என்ற யதார்த்தத்தையும் தெளிவு படுத்தினார்.
கவிதைகள்
அனைத்துமே தமிழின் இனிமையை அனுபவிக்க வைத்தது. எதுகை மோனை கூட எய்த அம்புபோல் பாயவே செய்தது. கவிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்ட விவகாரங்களில் இருந்து தமிழ் இனம் விடுபட்டால் விடிவு நிச்சயம் என்ற நம்பிக்கையை விதைத்துச் சென்றது.
முழுமதிபோல்
இருந்து கவிதை அரங்கிற்கு ஒளியூட்டிய அரங்கத் தலைவர் அண்ணதாசன் இறுதியுரையை வரலாற்றுத் தவறுகளை அனுபவங்களை கோடிட்டு
வருங்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அழகாக வடித்தெடுத்து அரங்கில் வார்த்தார்.
விடியுமா
தமிழர் வாழ்வு என்பது ஒரு பரீட்சை போன்றது. ஏற்கக் கூடியது, நீடித்து நிற்பது. நியாயமானது. நடைமுறைக்கு ஏற்றது..அரசியல் அமைப்பின் அடக்கம் இந் நான்கும். இவற்றை அடைவதற்கு வழி வகை செய்வோம்.;
தலைமையின்
விளக்கம்தனை செவி கொள்வோம். தகவல்கள் பெறவே தர்க்கமும் செய்வோம். உள் வீட்டுக்குள் உரசி எடுப்போம். உள்ளோட்டம் விட்டபின் வெளியில் உரைப்போம்.
இத்தனை
பரீட்சையையும், சிறப்புற தாண்டினால், விடியும் தமிழர் வாழ்வு. விடியும். திராவிடநாடு
விட்டு, செந்தமிழ் மாநிலம் பெற்ற அண்ணாவின் வழியும் உண்டு. அதையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். எதிரி எதை ,எதை எண்ணினானோ அதை நடக்காமல் செய்வதுதான் வெற்றி. அதற்கென நாம் காண்போம் புத்தி.
(படங்கள் : ச.பா.மதன்)