நினைவோடு கலத்தல்...




















எங்கோ கேட்டு
முனுமுனுக்கும்
பாடலின் மெல்லிய
வருடலாய்..

எங்கோ வாசித்து
போகும் கவிதையின்
கருவாய் உருவாய்...

எங்கோ நீ
அழைக்கையில்
ஓடி வந்து
நெற்றிதீண்டி
 மகளீந்தும்
முத்தமாய்..

எங்கோ நீ
தலைவாருகையில்
காற்றோடு
கலைந்துவிழும்
கேசத்தின் நேசமாய்...

எங்கோ உன் மகிழ்வில்
விழியொதுங்கும்
ஈரத்தில் எப்போதும் பனித்திருக்கும்
இவளின் விழியாய்..

எங்கோ
உன் சாளரங்களில்
கடந்து உனை
சுற்றித்திரியும்
காற்றாய்..

எங்கோ நீ
தனித்திருக்கையில்
அருகிருக்கும்
துணையாய்.

என்னை நினைந்தபடி
விலக்குகிறாய்
என் நினைவுகளை
உன்னை ஏமாற்றியபடி...

கவிதாயினி.இன்போ.அம்பிகா


Photo : Fabio Sabatini