இளநீர்














தென்னை தேங்கும் நீர்
தேக சுகம் தரும் நீர்
மண்ணில் இட்ட மாசு நீர்
மருந்தாய் ஆன மர நீர்


இயற்கை தந்த இளநீர்
இனிய சுவை மிகு நீர்
களைப்பைப் போக்கு நீர்
கள்ளாய் மாறும் நீர்


செந்நீர் சீர்செய்யும்; நீர்
செல்லா மலமகற்று நீர்
சிறுநீர் செறிவகற்று நீர்
சிறுகல் சிதைக்கும் நீர்


தீர்த்தம் ஆகும் தேவநீர்
தினம் குடிக்கத் தகு நீர்
காத்து நுழையாதிரு நீர்
காப்பாய் ஆன இளநீர்

வில்லூரான்

படம் : www.melathirupanthuruthi. com