இது தான் வாழ்க்கையா

















அன்றொரு நாள் இணைந்தன இரு உயிர்கள்.
விதியின் விளையாட்டில்
அரும்பாய் துளிர்த்தேன் தாயின் கருவறையில்

பத்துத் திங்கள்  கருவறையில்
மொத்த திங்களில்  குழந்தை உருவாய்
ஏடு தொடக்கி எடுத்தேன் கையில் ஏட்டை
போட்டேன் என் தலையின் முதல் எழுத்தை
   
சில வருடம் மழலை மொழியாய்
பல வருடம் பட்சியாய் பறந்தேன்.
இயற்கையின் கட்டளையில்
காலம் போன போக்கில் குமரியாய் பல வருடம்
 
வாழ்க்கைச் சக்கரத்தில் என் வாழ்க்கை
வானமளவு வளராவிட்டாலும்
சேவைக்காய் ஒரு அன்னையாய்
தாதியமும் கைதந்தது

பருவமது கேலி பண்ணியது போலும்
படியாத மனமும் பாசத்திற்காய்
கட்டுண்ட வலையில் காதல் துளிர்க்க
கார்மேகம் சூழ்ந்தது வாழ்க்கையின் பிடியில்

சேரவழியின்றி பாதி தூரம்
சோகப்  பாலுண்டு மீதி தூரம்
போதனைகள் பல பெற்று
போலியான வாழ்க்கை பந்தமாய்

போர்க்கள வீரன் போல்
நிராயுதபாணியாய் திருமண பந்தத்தில்
சொல்ல வழியுமில்லை புரியும் நிலையுமில்லை

பகட்டான வாழ்க்கை விரைவில்
பாவியான பெண்மை என்னது.
அன்றொருநாள் என் பெற்றோர்
இன்றொருநாள் கணவனுடன் நான்.
இது தான் வாழ்க்கையா
இதுவும் வாழ்க்கையா

  • கிரிஷாந்தினி