தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெரும் கவிதைப் போட்டி-2015



























ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய
 மாபெரும் கவிதைப்  போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்… கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-31-10-2015 இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்… 

போட்டியின் நெறிமுறைகள் 

1.கொடுக்கப்பட்டுள்ள நாணயத்தை தோ்வு செய்து அதற்கான 15வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்) 

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார். 

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும். 

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும். 

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது 

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது. 

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும் 

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது 

10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம் 

11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com 

நடுவர்கள் 

1.கவிஞர்-ரமணி ஐயா -இந்தியா 
2.வலைச்சித்தர்.திரு.தனபாலன்- இந்தியா 
3.திரு.யாழ்பாவாணன்-இலங்கை. 
4.கவிஞர் த.ரூபன்-மலேசியா 

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ் 
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ் 
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ் (பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய  மின்னஞ்சல் முகவரி :-  ootru2@gmail.com 

ஊற்றுவலையுலகஎழுத்தாளர் மன்றத்தின் வலைப்பூ இதோ.