(27-04-2015) இன்று பிறந்த நாள் விழாக் கொண்டாடும் முத்தமிழ் வித்தகனுக்கோர் வாழ்த்து
எழிலான காரைதீவு
ஈன்றளித்த பொக்கிஸமே
கழிபேருவகை கொள்ளுதடா
அழியாப் புகழுடனே உனை
ஆக்கிவிட்ட ஆசித் தெய்வம்
ஆன சாமித்தம்பியோடு கண்ணம்மா
சரித்திரமே புகழுதடா
மதுரைத் தமிழ்ச் சங்கம்
தந்தபெரும் பண்டிதன் எனும் பட்டமேந்தி
ஆசானாய் அரும்தமிழ் ஊட்டி
அரிய பெரும் சாதனைகள் செய்தாய்
கோலத்தமிழ் கொண்டு
ஞாலமெங்கும் ஞாழிசைத்தாய்
வீழக்கிடந்த தமிழோடு சமயம்
எழப் பாடுகள் பட்டாய்
மதங்கசு10ழாமணி எனும்
மா கட்டுரை தந்த மறையோனே
வேதாந்த கேசரியோடு இராமகிருஸ்ண விஜயம்
என ஆன பல பனுவலுக்கும்
ஆசானாய் அமர்ந்தங்கு
அரிய பல கட்டுரைகள்
ஆக்கி எமக்களித்தாய்
முத்தமிழன் வித்தகனே
இத்தினத்தில் உனை நினைந்து
ஏத்துகிறேன் ஒளி தீபம்
செத்திடாதென் தமிழ் எங்கும்
சீர் பெற்று வாழ்ந்திடவே
வாழ்த்துகிறேன் - விபுலம் அறிவோளி இணையம் சார்பால்
கல்லடி வாழ் பொத்துவில் கவிஞன்- வில்லூரான்(க.முரளிதரன்)