உன்னைக் காணவில்லை – அன்பே
நெடுநாளாய் நானும்
தேடித் தேடிக் களைத்துவிட்டேன்
சலித்து விட்டேன்
எப்படியானாலும் என்னைத் தேடி
வருவாய் என்ற நம்பிக்கை
ஆனால… அதுவரை
உன்னை நினைத்து நான்
தவிக்கும் நாட்கள் எத்தனை?
உன் சிணுங்கல்களை நான்
ரசிப்பது எப்போது?
தாவி எனை நீ அணைக்கும் போது
உன் அன்பின் ஆழம் புரிகிறது
ஆனால் என் அன்பின் ஆழம்….
உனக்குப் புரியவில்லையா?
தினமும் காலையில் நீ தரும்
தீண்டல்கள் இல்லாமல் – என்
விடியலே வெறுத்து விட்டது
மனம் சோர்ந்து விட்டது….
சுற்றி சுற்றி நீ என்னை கிட்டவரும் போது
போ.. போ.. என் நான் சொன்னாலும்
முத்தமிட்டுச் செல்வாயே எனை….
என் அன்பு பீமாவே
என் செல்ல நாய்க்குட்டியே!
யார் வீட்டில் இன்று
நீ இருக்கிறாயோ?
எப்போது வருவாய் நீ
உன் நிறமும் உன்குணமும்
எனைக் கவர்ந்து விட்டது
காத்திருக்கிறேன் உனக்காக…..
உன் கட்டவிழ்த்து விட்டு
எப்போது வருவாய் என்னைத் தேடி
என் வீட்டைத் தேடி – ஆசை பீமாவே
காத்திருக்கிறேன்
விரைவில் வீடு வந்து சேருவாயா?
– சாம்பவி-
நெடுநாளாய் நானும்
தேடித் தேடிக் களைத்துவிட்டேன்
சலித்து விட்டேன்
எப்படியானாலும் என்னைத் தேடி
வருவாய் என்ற நம்பிக்கை
ஆனால… அதுவரை
உன்னை நினைத்து நான்
தவிக்கும் நாட்கள் எத்தனை?
உன் சிணுங்கல்களை நான்
ரசிப்பது எப்போது?
தாவி எனை நீ அணைக்கும் போது
உன் அன்பின் ஆழம் புரிகிறது
ஆனால் என் அன்பின் ஆழம்….
உனக்குப் புரியவில்லையா?
தினமும் காலையில் நீ தரும்
தீண்டல்கள் இல்லாமல் – என்
விடியலே வெறுத்து விட்டது
மனம் சோர்ந்து விட்டது….
சுற்றி சுற்றி நீ என்னை கிட்டவரும் போது
போ.. போ.. என் நான் சொன்னாலும்
முத்தமிட்டுச் செல்வாயே எனை….
என் அன்பு பீமாவே
என் செல்ல நாய்க்குட்டியே!
யார் வீட்டில் இன்று
நீ இருக்கிறாயோ?
எப்போது வருவாய் நீ
உன் நிறமும் உன்குணமும்
எனைக் கவர்ந்து விட்டது
காத்திருக்கிறேன் உனக்காக…..
உன் கட்டவிழ்த்து விட்டு
எப்போது வருவாய் என்னைத் தேடி
என் வீட்டைத் தேடி – ஆசை பீமாவே
காத்திருக்கிறேன்
விரைவில் வீடு வந்து சேருவாயா?
– சாம்பவி-